அன்று ஆணழகன் போட்டியில் தங்கம்... இன்று செயின் பறிப்பு குற்றவாளி!!

அன்று ஆணழகன் போட்டியில் தங்கம்... இன்று செயின் பறிப்பு குற்றவாளி!!

Update: 2022-03-20 18:34 GMT

சென்னை கொண்டித்தோப்பு சேர்ந்த ரத்னா தேவி(58) வீடு திரும்பும் போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் கழுத்தில் இருந்த 10 கிராம் தங்க செயினை பறித்து விட்டு மாயமானார். இந்த சம்பவம் தொடபாக ரத்னா தேவி ஏழுக்கிணறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதே போல பூக்கடை பகுதியில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் செயின் பறிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார். மேற்கண்ட குற்றசம்பவங்களில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் தான் என போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து தொடர் செயின் பறிப்பில் ஈடுப்பட்டு வந்த நபரை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஏழுக்கிணறு பகுதியில் இளைஞர் ஒருவர் தங்க நகையை உருக்க  வந்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தங்கப் பட்டறைக்கு போலிசார் விரைந்தனர். அங்கு சென்று அந்த இளைஞரை பார்த்த போதுதான் மேற்கண்ட செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர் என்பது தெரியவந்தது.

விசாரணை செய்தபோது, அவர் மண்ணடியை சேர்ந்த முகமது பைசல்(22) என்பது தெரியவந்தது. பிரபலமான பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்த இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு பி‌டெக் படிப்பை முடித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆணழகன் போட்டிக்கு தயாரான இவர் அகில இந்திய இளையோர் ஆணழகன் போட்டியில் கடந்த 2019 ம் ஆண்டு இந்திய அளவில் தங்கம் வென்றுள்ளார்.

போலீசாரின் விசாரணையில் முகமது ஃபைசல் பெரும் கடனாளியாக ஆகியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் முகமது ஃபைசலை நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத முகமது ஃபைசல் குற்றச்சம்வங்களில் ஈடுப்பட்டுள்ளார். முகமது ஃபைசல் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News