குறைந்து தங்கம் விலை.. குஷியில் நகை பிரியர்கள்..!
குறைந்து தங்கம் விலை.. குஷியில் நகை பிரியர்கள்..!
கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று (20-ம் தேதி) அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 544 ரூபாய் குறைந்து, 39,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 68 ரூபாய் குறைந்து, 4,957 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைபோல வெள்ளி விலை கிராமுக்கு 1.50 பைசா குறைந்து, ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.73,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 544 ரூபாய் குறைந்திருப்பது நகை பிரியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.