தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைவு ..!! வெள்ளி ராக்கெட் வேகத்தில் உயர்கிறது

தங்கம் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைவு ..!! வெள்ளி ராக்கெட் வேகத்தில் உயர்கிறது

Update: 2022-03-03 13:12 GMT

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,776-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 31 ரூபாய் குறைந்து, ரூ.4,847-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி பொறுத்தவரை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது . 5  நாட்களுக்கு முன் ஒரு கிலோ வெள்ளி 69000-க்கு விற்பனையான நிலையில் இன்று 72500-க்கு விற்பனையாகிறது. வெறும் 5 நாட்களில் 3500 வரை வெள்ளி விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது   

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 72,100 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து ரூ.72,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்பனை.

Similar News