தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கம் விலை சரிவு !!
தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கம் விலை சரிவு !!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.568 குறைந்தது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கிய சில மணி நேரத்திலேயே தங்கம் விலையில் பெரிய மாற்றம் காணப்பட்டது. சர்வதேச அளவில் ஏற்பட்ட இந்த மாற்றத்தால், நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.232-ம், பவுனுக்கு ரூ.1,856-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 951-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 608-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
எனினும் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. 22 காரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.1136 குறைந்து ரூ.38,472-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.142 குறைந்து ரூ.4,809- ஆக விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.70 சரிந்து ரூ.70க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்றும் இரண்டாவது நாள் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரன் ரூ.568 குறைந்து ரூ.37,904க்கு விற்பனையாகிறது . அதே போல் கிராமுக்கு ரூ .71 குறைந்து ரூ .4,738-க்கு விற்பனையாகிறது
உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்த முதல் நாளில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்றும் இன்றும் விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in