தொடர்ந்து 2 ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.568 குறைந்தது ..!!
தொடர்ந்து 2 ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.568 குறைந்தது ..!!;
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அதன் தாக்கத்தால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்தன. பங்குச்சந்தைகள் சரிவடைந்தன. தங்கம் விலை பொறுத்தவரை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 568 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,904-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 71 ரூபாய் குறைந்து, ரூ.4,738-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 70,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,000 ரூபாய் குறைந்து ரூ.69,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.