மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம்!!

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம்!!

Update: 2022-05-17 10:55 GMT

தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான நேற்று இறக்கத்துடனே தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளான இன்று அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4771 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4728 ஆக இருந்ததுஇன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 43 உயர்ந்துள்ளது.

அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,824-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 344 உயர்ந்து ரூ.38,168-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி வெள்ளியின் விலை ரூ. 64.20-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ. 1.20 உயர்ந்து ரூ. 65.40 விற்பனை செய்யப்படுகின்றது.

கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 4771க்கு விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

Similar News