தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தம்..? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!!

தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தம்..? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!!

Update: 2022-03-21 05:00 GMT

சென்னை மண்ணடியில் உள்ள பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த சென்னை மேயர் பிரியா, மாநகராட்சியின் பட்ஜெட் இந்த வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

ஆனால் அதே நேரத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறும்போது தாலிக்கு தங்கம் திட்டத்தில் பிழையுள்ளதால் காலத்திற்கு ஏற்ப அதை மாற்றி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தமா என கேட்கப்பட்ட கேள்விக்கு  பட்ஜெட்டில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இரு அமைச்சர்களின் இரு வேறு கருத்துக்களால், தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டதா இல்லையா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Similar News