ஃபேஸ்புக்கில் தங்கம் விற்பனை… ரூ.22 லட்சத்தை பறிகொடுத்த நபர்!!

ஃபேஸ்புக்கில் தங்கம் விற்பனை… ரூ.22 லட்சத்தை பறிகொடுத்த நபர்!!

Update: 2022-02-21 09:15 GMT

தங்கம் வாங்க வந்த நபரை கடத்தி அவரிடம் 22 லட்ச  ரூபாய் பணத்தை கொள்ளையடித்த 5 பேர் கொண்ட மோசடி கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், சுரேந்திரா, சந்திரா, வெங்கட்ரமணா, ராஜசேகர் ஆகிய ஐவரும் குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும் என ஃபேஸ்புக் பக்கத்தில் விளம்பரம் செய்தனர்.

அதனைக்கண்ட கடப்பா ராயச்சோட்டியைச் சேர்ந்த உசேன் என்பவர் அவர்களை தொடர்பு கொண்டு ஒரு கிலோ தங்கம் வேண்டும் என கேட்டிருக்கிறார். அதற்கு அந்த கும்பல் ரூ.38 லட்சம் ஆகும் என கூறியது.

இதனையடுத்து, முதலில் ரூ.22 லட்சத்தை எடுத்துக்கொண்டு உசேன் அவரது நண்பர் சைஃப் உடன் திருப்பதிக்கு சென்றார். அங்கு சென்றவர்களிடம் தங்கக்கட்டியை காண்பித்ததோடு பீளேரில் உள்ள எல்லமந்தா வளைவுக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையடுத்து தனியாக பீளேருக்கு சென்ற உசேனை தங்கத்தை எடுத்து வருவதற்காக வேறொரு இடத்துக்குச் செல்லவேண்டும் எனக் கூறி அவர்கள் வந்த சொகுசு காரில் அழைத்து சென்றனர்.

அப்போது திடீரென காரை நிறுத்திய அந்த கும்பல் உசேன் வைத்திருந்த 22 லட்ச ரூபாயை பறித்துக்கொண்டு அவரை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றது. இதனையடுத்து பீளேர் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

தீவிர விசாரணை நடத்திய போலீஸார் பீளேரில் உள்ள தொழிற்பூங்காவில் தலைமறைவாக இருந்த மோசடி கும்பலை கைது செய்து அவர்களிடம் இருந்த 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும், 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

newstm.in

Similar News