குட் நியூஸ்..!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது!!
குட் நியூஸ்..!! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது!!
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.
அதன்படி, கடந்த மே மாதம் 7, 19 ஆகிய தேதிகளில் எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி நிர்ணயித்தது. அதன்படி, சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,018.50-க்கும், வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 2,186-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்துள்ளது.அதன் படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.8.50 குறைந்து ரூ.2,177.50 ஆக விற்பனையாகி வருகிறது.
அதே போல் வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 1,068.50-க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.