“தேர்தல் முடிந்ததும் நல்ல அறிவிப்பு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!

“தேர்தல் முடிந்ததும் நல்ல அறிவிப்பு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!

Update: 2022-02-18 06:15 GMT

தேர்தல் முடிந்ததும் நல்ல அறிவிப்பு வெளியிட உள்ளதாக சென்னை புத்தகக் காட்சியில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை 45ஆவது புத்தகக் காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர், 2007-ஆம் ஆண்டு இந்தப் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க கலைஞர் வருகை தந்த நேரத்தில், அப்போது நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சன் 'முதலமைச்சர் வந்தால் அறிவிப்பு இல்லாமல் இருக்காது' என்று சொன்னார்.

அந்த வகையில், முதலமைச்சராக வந்துள்ள நானும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தான் ஆசையோடு வந்தேன். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அதனுடைய விதிமுறைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும்.

எனவே, அந்த அடிப்படையில் இப்போது அறிவிக்க முடியாது. இவ்வளவு நாள் பொறுத்திருந்தீர்கள், இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். விரைவில் நல்ல செய்தியை நான் அறிவிப்பேன். இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடக்கட்டும். வாசிப்புப் பழக்கம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Similar News