குட் நியூஸ்! தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!!

குட் நியூஸ்! தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!!

Update: 2022-03-23 11:50 GMT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 24ஆம் தேதி நாகை, காரைக்கால் பகுதியில் இருந்து சென்று நெடுந்தீவு பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இரண்டு விசைபடகையும் அதில் இருந்த 22 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 22 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 22 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை  நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த மார்ச் 10ஆம் தேதி சிறைக் காவல் முடிந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில்  22 மீனவர்களுக்கும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில்  மீனவர்கள் 22 பேரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால் இலங்கை நீதிமன்ற நீதிபதி  22 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

newstm.in

Similar News