குட் நியூஸ்..!! ரூ.1,000 ஊக்கத்தொகை பெறும் மாணவிகளின் பட்டியல் வெளியானது..!!
குட் நியூஸ்..!! ரூ.1,000 ஊக்கத்தொகை பெறும் மாணவிகளின் பட்டியல் வெளியானது..!!
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இப்போது 2-ம் ஆண்டில் திமுக பயணிக்கிறது. அது மட்டும் இன்றி ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி அவை சிறப்பான முறையில் செயல்படுத்தப்படவும் உள்ளது.
அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும், மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. அது மட்டுமின்றி, மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், உயர்கல்விக்கான ரூ. 1,000 ஊக்கத்தொகை பெறும் மாணவிகளின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 2.70 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை https://studentsrepo.tn, https://schools.gov.in என்ற இணையதளம் மூலம் காணலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.