குட் நியூஸ்..!! பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு முதல் 5 நாட்களுக்கு இந்த வகுப்பு மட்டுமே!!
குட் நியூஸ்..!! பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு முதல் 5 நாட்களுக்கு இந்த வகுப்பு மட்டுமே!!
2022 - 2023 ஆம் கல்வி ஆண்டுக்காக, வரும் 13-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில், தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், திட்டமிட்டபடி ஜூன் 13-ம் தேதி கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறந்ததும் முதல் 5 நாட்கள் மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 21-வது ஆண்டு பொதுக்குழு மாநில மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் 13-ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளன. மாணவ, மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். முதல் 5 நாள்கள் நல்லொழுக்கத்தை போதிக்கும் வகுப்புகள் நடத்தப்படும்.
இதில், என்ஜிஓக்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு நல்லொழுக்கங்களை அறிவுரையாக வழங்குவர் என்று தெரிவித்தார். மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வருகிற ஜூலை அல்லது செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் பயப்படாமல் அந்த தேர்வை எழுத முன்வர வேண்டும் என்றார்.