நற்செய்தி.. புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை..!

நற்செய்தி.. புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் விடுதலை..!

Update: 2022-07-15 12:58 GMT

இலங்கை சிறையில் உள்ள புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மாதம் இரண்டு விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் 11 மீனவர்களையும் விசாரணைக்காக இலங்கையில் உள்ள ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 11 மீனவர்களையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தும், மீனவர்களின் 2 படகுகளை அரசுடமையாக்கவும் உத்தரவிட்டார்.

Similar News