குட் நியூஸ்.. தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள்.. அரசு ஒப்புதல்..!
குட் நியூஸ்.. தமிழகத்தில் புதிதாக ஐந்து மாவட்டங்கள்.. அரசு ஒப்புதல்..!
தமிழகத்தில், 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை கண்காணிக்க, 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
பத்திரங்களின் வரத்து, மக்கள் தொகை அடிப்படையில் சில வருவாய் மாவட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவு மாவட்டங்கள் உள்ளன.
சமீபத்திய சில ஆண்டுகளில், பல பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய வருவாய் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனாலும், சில வருவாய் மாவட்டங்களில் பதிவு மாவட்டங்கள் இல்லாத நிலை உள்ளது.
அதனால் திருவாரூர், திருவள்ளூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் என, ஐந்து புதிய பதிவு மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.
இதன் நிர்வாகப் பணிகளுக்காக 2.35 கோடி ரூபாய் ஒதுக்கவும் முடிவானது. முதற்கட்டமாக பெரம்பலூர் பதிவு மாவட்டம் உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான புதிய பணியிடங்கள், நிர்வாக எல்லை, அலுவலகம் அமைப்பதற்கான நிதியை விடுவிக்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மற்ற நான்கு பதிவு மாவட்டங்களுக்கான அரசாணையும் படிப்படியாக பிறப்பிக்கப்படும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிதாக ஐந்து பதிவு மாவட்டங்கள் உருவாக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், பத்திரப்பதிவு பணிகள் தாமதமின்றி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.