மாத தொடக்கத்தில் குட் நியூஸ்.. சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைந்தது..!

மாத தொடக்கத்தில் குட் நியூஸ்.. சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைந்தது..!

Update: 2022-06-01 10:19 GMT

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தின் அடிப்படையில் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்நிலையில், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், ஒரு சிலிண்டர் விலை சென்னையில் 2,373 ரூபாய் ஆகவும், டெல்லியில் 2,219 ரூபாய் ஆகவும், கோல்கத்தாவில் 2,322 ரூபாய் ஆகவும், மும்பையில் 2171.50 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளதால் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் பயனாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Similar News