மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்.. உபர், ரேபிடோ வசதி தொடக்கம்..!

மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்.. உபர், ரேபிடோ வசதி தொடக்கம்..!

Update: 2022-03-10 11:27 GMT

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக உபர் ஆட்டோ, ரேபிடோ பைக் வசதி தொடங்கப்பட்டது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் மெட்ரோ நிறுவன இயக்கப்பிரிவு இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி இப்புதிய வசதிகளை துவக்கி வைத்து பேசியதாவது:

“மெட்ரோ ரயில் பயணிகள் சேரும் இடத்தை எளிதாக்கும் வகையில், ரேபிடோ பைக் மற்றும் உபர் ஆட்டோ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு, கிண்டி, ஆலந்தூர், எழும்பூர், திருமங்கலம் நிலையங்களில் இருந்து உபர் ஆட்டோ இயக்கப்படும். உபர் செயலியில் 'ubercmrl' என்ற குறியீட்டை பயன்படுத்தினால் 20 சதவீத கட்டண சலுகை பெறலாம். அதிகபட்சம், 50 ரூபாய் வரை மட்டுமே கட்டண சலுகை பெறலாம். இச்சலுகை ஆகஸ்ட் 31 வரை அனுமதிக்கப்பட்டு உள்ளது.

விமான நிலையம், ஆலந்தூர், உயர்நீதிமன்றம், விம்கோ நகர், வடபழனி உட்பட 22 நிலையங்களில் ரேபிடோ பைக் வசதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் ரேபிடோ செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்து 30 சதவீதம் கட்டண சலுகை பெறலாம்” என அவர் பேசினார்.

விமான நிலையம், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், உயர்நீதிமன்றம், தியாகராயா கல்லூரி, திருவொற்றியூர், விம்கோ நகர், பரங்கிமலை, ஈக்காடுதாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணா நகர் கோபுரம், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ஆகிய 22 நிலையங்களில் ரேபிடோ பைக் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News