தமிழக போலீசாருக்கு குட் நியூஸ்.. புதிதாக 900 எஸ்ஐ-க்கள் தேர்வு..!

தமிழக போலீசாருக்கு குட் நியூஸ்.. புதிதாக 900 எஸ்ஐ-க்கள் தேர்வு..!

Update: 2022-02-24 13:08 GMT

தமிழக காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்ஐ-க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில், காவல்துறைக்கு புதிதாக, 900 எஸ்ஐ-க்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவர உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ‘ஆன்லைன்’ மூலம் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளன.

எஸ்ஐ பணிக்கு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் எழுத்து, உடற்திறன், நேர்முகத் தேர்வு என, மூன்று நிலைகளில் தேர்வுகள் நடத்த காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News