விஜய் ரசிகர்களுக்கு நற்செய்தி.. பூஜையுடன் தொடங்கியது ‘தளபதி-66’ படப்பிடிப்பு..!
விஜய் ரசிகர்களுக்கு நற்செய்தி.. பூஜையுடன் தொடங்கியது ‘தளபதி-66’ படப்பிடிப்பு..!
விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் 13-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து, ‘தோழா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிபள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் விஜய்யின் 66-வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.