விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது..!

விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது..!

Update: 2022-02-07 14:19 GMT

‘விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது’ என, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

அண்மையில் 'பீஸ்ட்' படப்பிடிப்பு நூறாவது நாள் நிறைவடைந்ததை அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து, 'பீஸ்ட்' படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டது. இதனால், ‘பீஸ்ட்’ படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் புதிய லுக் வெளியானது. அதில், படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

2022 புத்தாண்டையொட்டி, அப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம், திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இன்று வெளியாகும் அப்டேட்டில், ரிலீஸ் தேதி தொடர்பான அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14-ம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News