வாட்ஸ் அப் பயனர்களுக்கு குட் நியூஸ்.. இனி, 2ஜிபி வரை அனுப்பலாம்..!

வாட்ஸ் அப் பயனர்களுக்கு குட் நியூஸ்.. இனி, 2ஜிபி வரை அனுப்பலாம்..!

Update: 2022-03-30 12:37 GMT

உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ள வாட்ஸ்அப், பயனர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க, தன் அம்சங்களை மேம்படுத்துவதில் கடந்த சில காலமாக அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில், ஆடியோ மெசேஜ்களில் பல்வேறு அப்டேட்களை சமீபத்தில் அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப், பல மாதங்களாக பயனர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் புதிய அம்சம் ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை, 100 எம்பி அளவுள்ள பைல்களை மட்டுமே வாட்ஸ் அப்பில் பகிர முடியும் என்ற நிலையே நீடித்து வருகிறது.

விரைவில், 2ஜிபி அளவிலான பெரிய பைல்களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சோதனை முயற்சியாக, முதலில் அர்ஜென்டினா நாட்டில் இதனை பரிசோதனை செய்தபின், மற்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Similar News