சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, விவசாயம், கால்நடை, கல்வி, குடிநீர் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களுக்கு விருதும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் முதல் அமைச்சரால் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மாவட்டத்திற்கு ஒரு தொழில் நிறுவனம் என மொத்தமாக 37 மாவட்டங்களில் சிறந்து விளங்கும் தொழில் நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.