வேட்பாளர்களுக்கு குட் நியூஸ்.. கூடுதலாக 4 மணி நேரம்.. தேர்தல் ஆணையம் தாராளம்..!

வேட்பாளர்களுக்கு குட் நியூஸ்.. கூடுதலாக 4 மணி நேரம்.. தேர்தல் ஆணையம் தாராளம்..!

Update: 2022-02-11 15:40 GMT

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக வேட்பாளர்கள் பலரும் அதிதீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு கூடுதல் நேரம் அளித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று அறிவிப்பில் தளர்வளித்து அனுமதி அளித்துள்ளது.

தற்போது கூடுதலாக 4 மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. பிரச்சாரத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்று பிரச்சாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News