பக்தர்களுக்கு நற்செய்தி.. ஜூலை, ஆகஸ்ட் மாத தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. ஜூலை, ஆகஸ்ட் மாத தரிசன டிக்கெட் நாளை வெளியீடு..!

Update: 2022-05-20 15:45 GMT

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக 300 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது.

தரிசன டிக்கெட் பதிவு செய்து பெற்ற பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் 22-ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும்.

தங்கும் அறைகளுக்கு https://thirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News