பக்தர்களுக்கு நற்செய்தி.. இன்று முதல் 4 நாட்கள் மலையேற அனுமதி..!
பக்தர்களுக்கு நற்செய்தி.. இன்று முதல் 4 நாட்கள் மலையேற அனுமதி..!
வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி இன்று முதல் ஜூன் 15-ம் தேதி வரை சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஜூன் 12-ம் தேதி பிரதோஷமும், ஜூன் 14-ம் தேதி பவுர்ணமி வழிபாடும் நடைபெற உள்ளது.
இதையொட்டி, ஜூன் 12 முதல் ஜூன் 15-ம் தேதி வரையிலான 4 நாட்கள் மலைக் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவிலுக்கு வருபவர்கள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவர் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.