பக்தர்களுக்கு நற்செய்தி.. இனிமேல் வலம் வரலாம்.. அனுமதி வழங்கினார் ஆட்சியர்..!

பக்தர்களுக்கு நற்செய்தி.. இனிமேல் வலம் வரலாம்.. அனுமதி வழங்கினார் ஆட்சியர்..!;

Update: 2022-03-15 12:19 GMT

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வந்தது.

தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பெருந் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி தினங்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை  அரசால் நீக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து இந்த மாதம் பௌர்ணமி தினங்களான வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும்” என்று  அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News