அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. வெளியானது அரசாணை..!
அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. வெளியானது அரசாணை..!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது; ‘மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 21.04.2022 அன்று 2022 - 2023-ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன்படி, “22 அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி ரூ.2.52 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசுப் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணவர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.