வாகன ஓட்டுநர்களுக்கு குட் நியூஸ்.. சுங்கச்சாவடிகளில் புதிய வசூல் முறை..!
வாகன ஓட்டுநர்களுக்கு குட் நியூஸ்.. சுங்கச்சாவடிகளில் புதிய வசூல் முறை..!
தற்போதுள்ள நடைமுறையின்படி, சுங்கச் சாவடியை கடந்து செல்லும் ஒரு வாகனம், அந்த நெடுஞ்சாலையில் முழுமையாக பயணிக்காவிட்டாலும் அந்த சாலைக்கு உரிய முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டியதாக உள்ளது.
இந்த நடைமுறைக்கு மாற்றாக, ஒரு வாகனம் நெடுஞ்சாலையில், எவ்வளவு தொலைவு பயணித்திருக்கிறதோ அதற்கேற்ற வகையில் கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
வாகனம் சுங்கச்சாவடி உள்ள நெடுஞ்சாலையில் நுழைந்ததும் வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிபிஎஸ் கருவி அந்த வாகனம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் தொலைவை கணக்கிட ஆரம்பித்துவிடும்.
அந்த வாகனம் நெடுஞ்சாலையில் பயணத்தை முடிக்கும்போது, பயணித்த மொத்த தூரம் கணக்கிடப்பட்டு அதற்கான தொகை வங்கிக் கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு விடும்.
ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் இந்த வசூல் முறை நடைமுறையில் உள்ளது. தற்போது, இந்தியாவில் இதற்கான பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.