பெற்றோருக்கு நற்செய்தி.. 25-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்..!
பெற்றோருக்கு நற்செய்தி.. 25-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்..!
இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வரும் 25-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் சி.இ.ஓ. கிருஷ்ணபிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு 20.4.2022 முதல் 18.5.2022 வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 17-ம் தேதி வரை மாவட்டத்தில் 2,975 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, பொதுமக்கள் நலன் கருதி வரும் 25-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியான விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான காரணங்கள் இணையதளத்திலும், பள்ளி தகவல் பலகையிலும் வரும் 28-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியில் வரும் 30-ம் தேதி குலுக்கல் நடத்தி சேர்க்கை செய்யப்படும்.
குழந்தைகளின் பெயர் பட்டியல் வரும் 31-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஜூன் 3-ம் தேதி பள்ளியில் சேர வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.