பயணிகளுக்கு குட் நியூஸ்.. ஷீரடி - சென்னை இடையே மீண்டும் ரயில் சேவை..!
பயணிகளுக்கு குட் நியூஸ்.. ஷீரடி - சென்னை இடையே மீண்டும் ரயில் சேவை..!
சாய்நகர் ஷீரடி - சென்னை சென்ட்ரல் இடையேயான வாராந்திர ரயில் சேவை இன்று (13-ம் தேதி) முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, வாரந்தோறும் புதன்கிழமை காலை 10.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் (22601), மறுநாள் காலை 11.25 மணிக்கு சாய்நகர் ஷீரடியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், வெள்ளிக்கிழமை தோறும் காலை 8.25 மணிக்கு சாய்நகர் ஷீரடியில் இருந்து புறப்படும் இந்த ரயில் (22602), மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில்கள் அகமதுநகர், தவுன்ட், சோலாப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை இந்த ரயில் இயக்கப்படும் என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.