பயணிகளுக்கு குட் நியூஸ்.. தாம்பரம் - செங்கல்பட்டு 3வது ரயில் பாதை வரும் 26ல் தொடக்கம்..!
பயணிகளுக்கு குட் நியூஸ்.. தாம்பரம் - செங்கல்பட்டு 3வது ரயில் பாதை வரும் 26ல் தொடக்கம்..!
சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை மற்றும் மதுரை - தேனி அகல ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தை வரும் 26-ம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 386 கோடி ரூபாய் செலவில் 30 கி.மீ. தூரம் மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி முடிந்து, பயணியர் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை - போடிநாயக்கனூர் இடையே 450 கோடி ரூபாய் செலவில் 98 கி.மீ. மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில், மதுரை - தேனி வரை அகல ரயில் பாதை பணி முடிந்து, அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 26-ம் தேதி மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இவற்றை துவக்கி வைக்கிறார்.