#BREAKING:- ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ்.. 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு..!

#BREAKING:- ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ்.. 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு..!

Update: 2022-05-26 12:41 GMT

ஓய்வூதியதாரருக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து நிதித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.

இந்தத் திட்டத்தை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு, அதாவது 2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. இதற்கு தகுந்த பொதுத்துறை நிறுவனமானது ஒப்பந்தப் புள்ளிகள் கோரல் அடிப்படையில் இறுதி செய்யப்படும்.

நான்கு ஆண்டுகளில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு நிதி உதவியின் அளவு ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

புற்றுநோய், கணையம் உள்ளிட்ட இதர உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வோருக்கு மருத்துவ உதவித் தொகையின் அளவு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரூ.10 லட்சம் வரையில் மருத்துவ உதவித் தொகை கிடைக்கும். ஓய்வூதியதாரர்களைச் சார்ந்து இருக்கும் நபர்களும் புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்குள் வருவர்.

காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யும் மாதாந்திர தொகையானது ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களிடம் இருந்து பெறப்படும்.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகள் தொடர்ந்து புதிய காப்பீட்டுத் திட்டத்திலும் இருக்கும். தேவைப்படும் பட்சத்தில், பரிந்துரைக் குழுவின் அடிப்படையில் கூடுதல் மருத்துவமனைகள் சேர்க்கப்படும்.

உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும். இதுகுறித்த இதர வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News