ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி..!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி..!!

Update: 2022-05-21 14:05 GMT

விழுப்புரத்தில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று நிருபர்களிடம் பேசுகையில், 'தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி ரேஷன் கடைகள் ஒரு துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும்.

  • மேலும் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ உளுந்து ஆகியவை விரைவில் வழங்கப்படும்.
  • பயோ மெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படாததால், இனி கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும்.
  • 500 டன் அரைக்கும் அரிசி ஆலை 6-ம், 800 டன் அரைக்கும் ஆலை 3-ம், 200 டன் அரைக்கும் ஒரு தனியார் ஆலையும் நிறுவப்படும்.
  • இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காலி இடத்தில் கூரை அமைக்கப்பட்டு அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.

Similar News