ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. நிறுத்தப்பட்ட திட்டம் மீண்டும் தொடக்கம்..!

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்.. நிறுத்தப்பட்ட திட்டம் மீண்டும் தொடக்கம்..!

Update: 2022-02-05 13:00 GMT

நாடு முழுவதும் எந்த மாநில கார்டுதாரர்களும், தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது.

இதில் கூடுதல் அம்சமாக, தமிழகத்தில் வசிக்கும் கார்டுதாரர்கள், தங்கள் வார்டு அல்லது கிராமத்தை தவிர்த்து, வேறு எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டமும் துவக்கப்பட்டது.

இதனால், கார்டுதாரர்கள் எந்த மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்தாலும், அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கலாம்.

இதனிடையே, தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனால், எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; ‘பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதால், கைரேகை பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேலும், கார்டுதாரர்களுக்கு, அவர்களுக்கு ஒதுக்கிய கடைகளில் மட்டுமே பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த பணி முடிவடைந்தால், மீண்டும் எந்த கடையிலும் பொருட்கள் வழங்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்க ஊழியர்கள் மறுப்பதாக புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் புகார் அளிக்கலாம்.

பொருட்கள் வழங்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்’ என்று அவர் கூறினார்.

Similar News