ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ் : வெளியாகப்போகும் அசத்தல் அறிவிப்பு..!!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ் : வெளியாகப்போகும் அசத்தல் அறிவிப்பு..!!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு டிம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வரின் மஞ்சள் பை திட்டம் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ரூ.10 நாணயத்தை செலுத்தினால், 'மீண்டும் மஞ்சள் பை' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட துணிப் பை பிரிண்டாகி வரும் மஞ்சப்பை இயந்திரம் பொது இடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொது மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 'மஞ்சள் பை' திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், 'பிளாஸ்டிக் பயன்பாடு தமிழகத்தில் தடை செய்யப்பட்டாலும், இவற்றின் பயன்பாடு புழக்கத்தில் இருந்து மறையவில்லை. துணி பைகளின் பயன்பாடு அதிகரித்தால், பிளாஸ்டிக் பயன்பாடு தானாகவே குறைந்து விடும். இதற்கு, தமிழக அரசு அறிவித்த 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொது மக்களுக்கு இலவசமாக துணிப்பை வினியோகிப்பதன் மூலம் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்
ரேஷன் கடைகளில் மஞ்சப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.