ரேஷன் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளத்துடன் இந்த தொகையும் வழங்க உத்தரவு..!
ரேஷன் ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளத்துடன் இந்த தொகையும் வழங்க உத்தரவு..!
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ரேஷன் கடைகள் மூலம் கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா இரண்டு முகக் கவசங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.
இது, கூடுதல் பணி என்பதால் ஊக்கத்தொகை வழங்குமாறு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கார்டுக்கு தலா 50 காசு ஊக்கத்தொகை வழங்க, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை உத்தரவிட்டது.
தற்போது, நகர்ப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் 63.61 லட்சம் முகக் கவசங்கள் வழங்கியதற்காக, ஊழியர்களுக்கு தலா 50 காசு என மொத்தம் 31.80 லட்சம் ரூபாய் வழங்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் தொகை, ஊழியர்களின் சம்பள கணக்கில் வரவு வைக்கப்படும்.