#BREAKING:- ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவு..!
#BREAKING:- ரேஷன் கடை ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவு..!
தமிழகத்தில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கு 28 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வை 14 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் 22,510 பணியாளர்கள் பயன் பெறுவார்கள். இதனால், ஆண்டு ஒன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு கோரி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அரசு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் மூலம், தமிழக அரசு ஊழியர்கள் போன்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.