ரேஷன் கடை பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. ஊக்கத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு..!
ரேஷன் கடை பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. ஊக்கத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு..!
காதி பொருட்கள், பனை வெல்லம் போன்ற கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்யும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத் தொகை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் ஒரு மாதத்தில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் காதி பொருட்கள், பனை வெல்லம் போன்ற கட்டுப்பாடற்ற பொருட்கள் விற்பனை செய்ய வேண்டும்.
கிராமப்புறத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும்.
இதை பூர்த்தி செய்யும் விற்பனையாளர்களுக்கு, அந்த மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில் ஒரு சதவீதம் ஊக்கத் தொகையாக, மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் நியாயவிலைக் கடை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.