குட் நியூஸ்..!! தேர்வர்களின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்..!!
குட் நியூஸ்..!! தேர்வர்களின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்..!!
இந்தியன் ரயில்வே வாரியத்தின் இரண்டாம் கட்ட தேர்வுகள் வருகிற 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால், தேர்வர்களின் வசதிக்காக தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில்வே வாரிய தேர்வு சிறப்பு ரயில் நெல்லை - பெங்களூரு இடையே இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து ஜூன் 13-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் (14-ம் தேதி) மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக, பெங்களூருவில் இருந்து ஜூன் 17-ம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (18-ம் தேதி) காலை 10 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி - குர்னூல் இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடியில் இருந்து ஜூன் 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு புறப்படும் இந்த ரயில், மறுநாள் (14-ம் தேதி) காலை 10.15 மணிக்கு குர்னூல் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக, குர்னூலில் இருந்து ஜூன் 17-ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (18-ம் தேதி) மதியம் 2 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.