மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 5 நாட்கள் பள்ளிகள் விடுமுறை.. விரைவில் அறிவிப்பு..!
மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 5 நாட்கள் பள்ளிகள் விடுமுறை.. விரைவில் அறிவிப்பு..!
தமிழகத்தில் சென்னை உட்பட மாநகராட்சிகளுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19-ம் தேதி அதாவது சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பள்ளிகளுக்கு விடுமுறை. வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடைபெற உள்ளது.
எனவே, 22-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு பிறகு, 23-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.