மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பல்கலை மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு.. வெளியானது அரசாணை..!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பல்கலை மாணவர் சேர்க்கையில் 69% இடஒதுக்கீடு.. வெளியானது அரசாணை..!

Update: 2022-03-02 16:29 GMT

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்ற அரசாணை வெளியாகியுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், இதர  பிற்படுத்தப்பட்டோருக்கு இதுவரை அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில், அகில இந்திய  ஒதுக்கீட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News