மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

Update: 2022-05-16 10:43 GMT

நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 20-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேர்வதற்காக அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய தகுதி தேர்வான இளங்கலை நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான  நீட் தேர்வு நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ம் தேதி தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தொடங்கியது; விண்ணப்பிக்க கடைசி நாள் மே 6-ம் தேதி என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.

இந்த ஆண்டு புதிதாக தேர்வுக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, 20 நிமிடம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது. தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்று வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்வதற்கு கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில், மாணவ - மாணவிகளின் நலனை முன்னிட்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால், இளங்கலை நீட் தேர்வுக்கு மாணவ மாணவிகள் வருகிற 20-ம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in, https://neet.nta.nic.in என்ற இணையதளங்களில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Similar News