மாணவர்களுக்கு நற்செய்தி.. இனி, கணிதம் கட்டாயமில்லை..!
மாணவர்களுக்கு நற்செய்தி.. இனி, கணிதம் கட்டாயமில்லை..!
2022 - 2023-ம் கல்வியாண்டுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட சில பி.இ பொறியியல் படிப்புகளில் சேர கணிதம், வேதியியல் பாடங்கள் படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
மேலும், பெரும்பாலான பொறியியல் படிப்புகளுக்கு கணிதம் கட்டாயமல்ல என்றும், கணினி அறிவியல், மின் & மின்னணு பொறியியல் படிப்பில் சேர 12-ம் வகுப்பில் வேதியியல் படித்திருப்பது கட்டாயமல்ல எனவும் ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
குறிப்பாக, கட்டடக்கலை பயோடெக்னாலஜி மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி, உணவு பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் உள்ளிட்ட மூன்றில் ஒரு பங்கு பொறியியல் படிப்புகளுக்கு 12-ம் வகுப்பில் கணிதம் படித்திருக்க வேண்டும் எனத் தேவையில்லை என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.