மாணவர்களுக்கு குட் நியூஸ்.. கோடை விடுமுறை தேதி அறிவிப்பு..!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. கோடை விடுமுறை தேதி அறிவிப்பு..!

Update: 2022-05-12 17:30 GMT

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 31-ம் தேதி வரை தேர்வுகள் நடக்கின்றன.

மேலும் ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும். மற்ற நாட்களில் வர தேவை இல்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இந்நிலையில், ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, நாளை மறுநாள் (14-ம் தேதி) முதல் ஜூன் 12-ம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News