மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இன்ஜினீயரிங் சேர விண்ணப்பிக்கும் தேதி இது தான்..!
மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இன்ஜினீயரிங் சேர விண்ணப்பிக்கும் தேதி இது தான்..!
இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: “இன்ஜினீயரிங் படிப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் ஜூலை 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள், சொந்தமாகவும் விண்ணப்பிக்கலாம்.
அல்லது, அவர்கள் படித்த பள்ளிகள் மூலம் விண்ணப்பம் செய்யவும் பள்ளிக்கல்வித்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 110 இடங்களில் மாணவர்கள் விண்ணப்பம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 20 முதல் 31-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். ஆகஸ்ட் 8-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்ட் 14-ம் தேதி கவுன்சிலிங் துவங்கும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 16-ம் தேதியும், 7.5 சதவீத இட ஒதுக்கீடில் படித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22-ம் தேதியும் கவுன்சிலிங் துவங்கும். நீட் தேர்வு முடிவு வந்த பிறகு தான் இன்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர் சேர்க்கை துவங்கும்” என்று அவர் கூறினார்.