மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இனி, பழைய கட்டணமே வசூலிக்கப்படும்..!

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. இனி, பழைய கட்டணமே வசூலிக்கப்படும்..!

Update: 2022-05-13 19:23 GMT

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைந்து போன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்ப பெறப்பட்டு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை தொலைந்து விட்டாலோ, சேதமடைந்தாலோ, மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது.

அதன்படி, தொலைந்துபோன கிரேடு, மதிப்பெண் சான்றிதழை மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், Degree Certificate-க்கு கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ்களை பெற அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பின்படி மீண்டும் பழைய கட்டணங்களே வசூலிக்கப்படும் என  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.

Similar News