தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்.. மத்திய அமைச்சர் உறுதி..!

தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்.. மத்திய அமைச்சர் உறுதி..!

Update: 2022-03-26 11:34 GMT

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணத்தால், இந்திய மாணவர்கள் பலரும் மருத்துவ பயிற்சியை தொடர முடியாமல் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.

இவர்கள், இந்தியாவிலேயே மருத்துவ பயிற்சியை தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இது பற்றி நேற்று, லோக்சபாவிலும் கேட்கப்பட்டது.

இதற்கு, சுகாதாரத்துறை இணை அமைச்சர் பார்தி பிரவீன் பவார் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருந்ததாவது: “சீனா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் இந்திய மாணவர்கள் பலரும் மருத்துவம் படித்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.


தற்போது, உக்ரைனில் நிலவும் போர் சூழலால் அங்கிருந்து இந்திய மருத்துவ மாணவர்கள் பலரும் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் மருத்துவ பயிற்சி பெற்று வந்தோரும் அடங்குவர்.

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி படித்து, பயிற்சியையும் முடித்தவர்கள் இந்தியாவில் பணியாற்ற வேண்டும் என்றால் எப்.எம்.ஜி.இ. எனப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இப்போது, மருத்துவ பயிற்சியை முழுமையாக முடிக்காமல் தாயகம் திரும்பியுள்ள மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால், இங்கு பயிற்சியை தொடர அனுமதி வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

Similar News