ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. விருதுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு..!
ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. விருதுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு..!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களில் சிறந்த, திறன் வாய்ந்த ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது கல்வித்துறையால் வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு தேர்வாகும் 10 ஆசிரியருக்கு தலா ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலை, சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள அறிவியல் ஆசிரியர்கள் www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் விருதுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 7-ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும் என கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ‘2020 - 2021-ம் ஆண்டிற்கான ஊரக கண்டுபிடிப்பாளர் விருது மற்றும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வரும் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.