தூய்மைப் பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. கலெக்டர்களுக்கு தலைமை செயலர் கடிதம்..!

தூய்மைப் பணியாளர்களுக்கு குட் நியூஸ்.. கலெக்டர்களுக்கு தலைமை செயலர் கடிதம்..!

Update: 2022-06-22 12:10 GMT

“அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணியாளர்களுக்கு இளைப்பாற தனி ஓய்வறை அமைத்து தர வேண்டும்” என, மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு, தலைமைச் செயலர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், “அரசு அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தி துலங்கச் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதைப் பற்றி பலரும் என் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.


நீங்கள் இதில் நேரடியாக தலையிட்டு, பணிக்கு நடுவே அவர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் உட்கார்ந்து உணவருந்தவும், நீர்  பருகவும் போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மற்ற அலுவலகங்களிலும் இந்த நெறி முறைகளை பின்பற்ற வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News