மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்.. நினைத்த நேரம் கடல் அழகை கண்டு ரசிக்கலாம்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்.. நினைத்த நேரம் கடல் அழகை கண்டு ரசிக்கலாம்..!

Update: 2022-04-15 18:26 GMT

மாற்றுத்திறனாளிகள், எப்போது வேண்டுமானாலும் கடல் அருகே சென்று அதன் அழகை ரசிக்கும் வகையில், 1.09 கோடி ரூபாய் செலவில் மெரினாவில் நிரந்தர பாதை அமைக்கப்பட உள்ளது.

சென்னையில், ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, அவர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் மெரினா கடற்கரையில் தற்காலிக பாதை அமைக்கப்படும்.

இந்த பாதை வழியாக மாற்றுத்திறனாளிகள் கடலின் அருகே சென்று அதன் அழகை கண்டு மகிழ்வர். கடந்த ஆண்டு ஒருவாரம் நடந்த இந்நிகழ்வின்போது, நிரந்தர பாதை அமைக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி, சிங்கார சென்னை 2.0 திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர பாதை அமைக்க ஒப்பந்தம் கோரியது.

இதில், 1.03 கோடி ரூபாய் செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்க 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. அதன்படி, மெரினா கடற்கரை காந்தி சிலை பின்புற பகுதியில், மரப் பலகைகளைக் கொண்டு நிரந்தர பாதை அமைக்கப்பட உள்ளது.

இந்தப் பணிகள் முழுமை பெற்ற பின், மற்றவர்களைப் போல் மாற்றுத்திறனாளிகளும் எப்போது வேண்டுமானாலும் கடல் அருகே சென்று அதன் அழகை ரசிக்க முடியும்.

Similar News